Friday, March 26, 2010

ஆக்கல் அரிது அழித்தல் எளிது

பொதுவாக ஆக்கல் எளிது அழித்தல் அரிது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உடல் பராமரிப்பு என்று வரும்பொழுது அதற்கு நேர் மாறாக இருக்கிறது.
உடல் பராமரிப்பை பொறுத்த வரை ஆக்கல் என்பது சுலபமான விஷயமாகவே தெரிகிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு 10 பேரிலும் குறைந்த பட்சம் 8 அல்லது 9 பேருக்கு தொப்பை இருக்கிறது..

உங்கள் உடல் எடையை கூட்டுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்று தான், நன்றாக மூச்சுமுட்ட சாப்பிட்டு விட்டு தூங்கினாலே போதுமானது. அதுவே உடல் எடையை குறைக்க வேண்டுமென்றால் நமக்கு அவ்வளவு தான்.. நாக்கு வெளியே தள்ளி விடும். தினமும் குறைந்த பட்சம் 1 கிலோமீட்டர் தூரமாவது ஓட வேண்டும். உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று 1 மணி நேரமாவது குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். முக்கியமாக டயட் இருக்க வேண்டும்... அப்படியே தினமும் செய்து வந்தாலும் 5 கிலோ எடை குறைய 6 மாதம் தேவைப்படுகிறது..

இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்????

  • கொழுப்பு குறைந்த உணவுகளை உடிகொள்ளலாம்
  • பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்லலாம்
  • தினமும் குறைந்தபட்சம் 10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்யலாம்
இப்படிச் செய்து வந்தால் ஆரோக்கியமாக இருக்கலாம்.....



No comments:

Post a Comment